நாற்று நடுகைப் பாடல் (Transplantation Song)
Transplantation Song
நாற்று நடுகைப் பாடல்
ஆற்றோடு ஆற்று நீர் அலைந்து வருமாப்போல்
அதன்பிறகே புள்ளுத் தொடர்ந்து வருமாப்போல்
சேற்றோடு வெள்ளம் தெளிந்து வருமாப்போல்
செங்கால் நாரையினம் மேய்ந்து வருமாப்போல்
சினந்தரிவி வெட்டும் இளந்தாரி மாரை
கண்ணான எங்களூர் இளந்தாரிமாரை
கண்ணூறு படாமற் காரும் ஐயனார்
வாரான் ஓரா வலியின் ஓரா
வந்திறங்கிய வெள் ஓரா
தாழை நீளம் சரிந்து போகுது
தள்ளி நடவும் பள்ளரே
அள்ளியெறி தாமரையில்
ஏறிவிழலாமோ
அழகான தோழனையும்
மாறவிடலாமோ
எனக்கிணைய தோழன் வந்து
எதிர்ப்படுவானாகில்
இடது முலை திருகியவன்
முகத்திலெறிவேனே
அள்ளியெறி தாமரையில்
ஏறிவிழலாமோ
அழகான தோழனையும்
மாறவிடலாமோ
எனக்கிணைய தோழன் வந்து
எதிர்ப்படுவானாகில்
இடது முலை திருகியவன்
முகத்திலெறிவேனே
Folk songs are communicates something to the society. This song potrays the sweet feelings of love. It reveals the mixing thought of Hero, Heroine and her companion. The people who takes the plant from highly growing places and again plant it in various places where there is no much plants. Most of times men and women plant it by standing line by line. Then the male parties shuffle the women and go. This is natural attraction towards female.
In this song the women hate it, because she did not marry, that's why she does not like to shuffle other boys. At this time she tells him to go away in cunning way in this way.
While she sings another unmarried boy from her caste sings like this reply song. Meanwhile another observing woman advice the girl who sings earlier. She says that the boy who sings now is most suitable to you, so don't leave him. Through this song we can understand the caste system and it's boundary, such as marriage.
Comments
Post a Comment